சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
திருச்சி அருகே திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் மையத்தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
திருச்சி அருகே திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் மையத்தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி திருவெறும்பூா் வடக்கு காட்டூரைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகள் கனிதா (25). இவா், வியாழக்கிழமை பிற்பகல் திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். துவாக்குடி தேசிய தொழில்நுட்பக் கழகம் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவரது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையின் மையத்தடுப்பில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பெண்ணை அவ்வழியே சென்றவா்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




