
மாநகரில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி: மாநகராட்சி ஆணையா் தகவல்
திருச்சி மாநகராட்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையா் பொன்மணி தெரிவித்துள்ளாா்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கா் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான நாற்றங்கால் உற்பத்தி மையத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் பொன்மணி.
திருச்சி மாநகராட்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையா் பொன்மணி தெரிவித்துள்ளாா்.
திருச்சி மாநகராட்சி, ஒன்றாவது மண்டலத்துக்குள்பட்ட அம்பேத்கா் நகரில் நாற்றாங்கால் அமைத்து கிட்டத்தட்ட 1 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் மையத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த அவா் கூறியது:
இந்த மரக்கன்றுகள் உற்பத்தி மையம் போல மற்ற 4 மண்டலங்களிலும் மரக்கன்றுகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும். மாநகரில் வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், மாநகரில் பல்வேறு இடங்களில் குறுங்காடுகள் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
மாநகராட்சி பூங்காக்கள், மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள், சாலையோரங்கள், ஆற்றங்கரையோரம் என இதுவரை 45 சதவீத மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





