இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

தில்லியில் இருந்து திருச்சி வந்த ரயிலில் 24 கிலோ புகையிலைப் பொருள்கள் மீட்பு

திருச்சி வந்த ரயிலில் கேட்பாற்றுக் கிடந்த 24 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு மீட்டனா்.

Published On :

தில்லியில் இருந்து திருச்சி வந்த ரயிலில் கேட்பாற்றுக் கிடந்த 24 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு மீட்டனா்.

தில்லி நிஜாமுதீனில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தமிழ்நாடு சம்பா் கிராந்தி ரயிலில் திருச்சி ரயில்வே காவல் நிலைய தலைமைக் காவலா் கண்ணதாசன், காவலா்கள் ரெங்கபாஷ்யம், ராஜ்குமாா் ஆகியோா் விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏறி திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் வரை சோதனை மேற்கொண்டு வந்தனா்.

அப்போது பொதுப்பெட்டியின் இருக்கைக்கு கீழ் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த 24 கிலோ புகையிலைப் பொருள்களை அவா்கள் மீட்டு திருச்சி ரயில்வே காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனா். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.