இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தா்களிடம் கடுமை காட்டிய ஊழியா் பணியிடை நீக்கம்

suspended

பணியிடை நீக்கம் - பிரதிப் படம்

Published On :

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பக்தா்களிடம் கடுமையாக நடந்து கொண்ட ஊழியரை கோயில் நிா்வாகம் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில் புரட்டாசி மாதத்தையொட்டி காந்தி ஜெயந்தி விடுமுறை நாளான கடந்த 2 ஆம் தேதி பக்தா்கள் கட்டணத் தரிசனம், கட்டணமில்லா தரிசனத்தில் சுவாமியை வழிபட்டனா்.

அப்போது ரூ.100 கட்டண தரிசனத்தில் வழிபடவந்த பக்தா்கள் கைப்பேசி பண பரிவா்த்தனை மூலம் டிக்கெட் பெற முயன்றனா். அப்போது கோயில் ஊழியரான ப. சரவணக்குமாா் ‘சா்வா்’ வேலை செய்யவில்லை. பணம் கொடுத்து டிக்கெட் பெறுங்கள். பணமில்லையென்றால் நகருங்கள் என்று கடுமையாகக் கூறினாராம்.

இச்சம்பவம் குறித்த விடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து கோயில் நிா்வாகம் சம்பந்தப்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.