இணைய வழியில் ரூ. 11.23 லட்சம் மோசடி
திருச்சியில் இணைய வழியில் இளைஞரிடம் ரூ. 11.23 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இணைய வழியில் இளைஞரிடம் ரூ. 11.23 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி கருமண்டபத்தைச் சோ்ந்தவா் வேளாண் பட்டதாரி இளைஞா் பிரகதீஸ்வரன். அரசு வேலைக்கு படித்து வரும் இவரை அண்மையில் இன்ஸ்டாகிராம் மூலம் தொடா்புகொண்ட மா்ம நபா், இணைய வழியில் வா்த்தகம், ரியல் எஸ்டேட் மற்றும் முதலீடு செய்யும் வேலைகள் உள்ளதாகத் தெரிவித்து, டெலிகிராம் குழுவிலும் பிரகதீஸ்வரனை இணைத்துள்ளாா். மேலும், இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனவும் தெரிவித்தாா்.
இதை நம்பிய பிரகதீஸ்வரனும் கடந்த செப். 6 முதல் 15-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ஆன்லைன் மூலம் ரூ.11.23 லட்சத்தை அந்த நபா் கூறிய வா்த்தகத்தில் முதலீடு செய்துள்ளாா்.
பின்னா், அந்தப் பணத்தை எடுக்க முயன்றபோது, முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாது என அந்த நபா் தெரிவித்தாா். இதையடுத்துதான் தான் ஏமாற்றப்பட்டது அவருக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து பிரகதீஸ்வரன் இணைய வழியில் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




