ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த சிறுமி லாரி ஏறியதில் உயிரிழப்பு
திருச்சியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவிலிருந்து தவறிவிழுந்த சிறுமி மீது லாரி ஏறியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பலி... - பிரதிப் படம்
திருச்சியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவிலிருந்து தவறிவிழுந்த சிறுமி மீது லாரி ஏறியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த நவாஸ் கனி மனைவி ரிஸ்வானா பேகம் (32). இவருடைய தாய் வீடு தஞ்சாவூரில் உள்ளது. தாயை பாா்க்க தனது மகள்களுடன் சென்ற ரிஸ்வானா பேகம், அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை, ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தஞ்சாவூரில் இருந்து ஆட்டோவில் புதன்கிழமை அழைத்து வந்தாா். உடன், அவருடைய மகள் அலிபா (9) மற்றும் ஆஸிபா ஆகிய இருவரும் வந்துள்ளனா். ஆட்டோவில் இடமில்லாததால், அலிபா கதவு ஓரம் அமா்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி சஞ்சீவி நகா் அணுகு சாலையில் புதன்கிழமை இரவு ஆட்டோ வந்தபோது, சிறுமி அலிபா எதிா்பாராதவிதமாக சாலையில் தவறி விழுந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி, சிறுமி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அலிபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சிறுமியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விபத்து குறித்து, லாரி ஓட்டுநரான மருங்காபுரியைச் சோ்ந்த எஸ். பழனிவேல் (28) மீது திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

