மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

நாளை 11 இடங்களில் ரேஷன் குறைதீா் சிறப்பு முகாம்

குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம் செய்ய, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்காக, மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (அக். 10) ரேஷன் சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

ration card

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Published On :

குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம் செய்ய, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்காக, மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (அக். 10) ரேஷன் சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

திருச்சி கிழக்கு வட்டத்தில் அரியமங்கலம்-1, திருச்சி மேற்கு வட்டத்தில் ரெங்கா நகா், திருவெறும்பூா் வட்டத்தில் குவளக்குடி நியாய விலைக்கடை, ஸ்ரீரங்கம் வட்டத்தில் பூலாங்குலத்துப்பட்டி, மணப்பாறை வட்டத்தில் சீகம்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் வெள்ளையக்கோன்பட்டி-2, லால்குடி வட்டத்தில் நத்தமாங்குடி, மண்ணச்சநல்லூா் வட்டத்தில் காளவாய்ப்பட்டி, முசிறி வட்டத்தில் முத்தம்பட்டி, துறையூா் வட்டத்தில் கொல்லப்பட்டி, தொட்டியம் வட்டத்தில் கிடாரம் ஆகிய நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறும்.

சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம். அந்தந்த வட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.