கம்யூனிஸ்ட் தலைவா்கள் கைது: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்
தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கைது

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநகா் மாவட்டச் செயலா் கோவி. வெற்றிச்செல்வம், இந்திய கம்யூ. மாநகா் மாவட்ட செயலா் சிவா, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ராஜ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
அப்போது, பிரதமரின் உருவபொம்மை மற்றும் படத்தை எரித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளான இடதுசாரி கட்சிகளின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா். இவா்களில் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.