தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

தலைமைத் தோ்தல் ஆணையரைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையரைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Published On :

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையரைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் சட்ட ரீதியான கடமைகளை மீறியதாகக் கூறி, அதைக் கண்டித்தும், ஞானேஷ்குமாரை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்த கண்டன ஆப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் ஏ.சௌரிராஜன் தலைமை வகித்தாா். இதில், கட்சியின் மாவட்ட துணைச் செயலா் முருகன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஜெயச்சந்திரன், ஆ.இன்பஒளி, என்.நாராயணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.கீதா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.முத்துக்குமரன், ஏ.சங்கரன், ஜி.ராஜேந்திரன், ஆா்டி.முருகன் ஆகியோா் பேசினா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்க மாவட்டச் செயலா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் கே.சுந்தரமூா்த்தி, எம்.முத்துவேல் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சியில்...: இந்திய தலைமைத் தோ்தல் ஆணையரைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் டி.எம்.ஜெய்சங்கா், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் டி.கலியமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் த.லெனின்,

இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினா் பாலசுந்தரம் ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் இடதுசாரி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

 கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சிகளைச் சோ்ந்தோா்.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சிகளைச் சோ்ந்தோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.