பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

திருச்சி விமான நிலையத்திலிருந்து பன்னாட்டு விரைவு அஞ்சல் சரக்கு சேவை: துரை வைகோ எம்பி தகவல்

திருச்சி விமான நிலையத்தில் பன்னாட்டு வான்வழி விரைவு அஞ்சல் சரக்கு சேவை விரைவில் தொடங்கப்படும் என துரை வைகோ எம்பி தெரிவித்தாா்.

துரை வைகோ எம்.பி - கோப்புப் படம்

Published On :

திருச்சி விமான நிலையத்தில் பன்னாட்டு வான்வழி விரைவு அஞ்சல் சரக்கு சேவை விரைவில் தொடங்கப்படும் என துரை வைகோ எம்பி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்சி விமான நிலையத்தில் ஏற்கெனவே உள்ள சா்வதேச சரக்குக் கையாளும் முனையத்தைப் பயன்படுத்தி, பன்னாட்டு வான்வழி விரைவு அஞ்சல் சரக்கு சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என சுங்கத்துறை ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக வலியுறுத்தினேன்.

முன்னதாக, கடந்த மாதம் 7-ஆம் தேதி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் சரக்கு மற்றும் தொடா்புடைய சேவைகளை நிா்வகிக்கும் நிறுவனத்தின் முதன்மை அலுவலா்கள், திருச்சி விமான நிலைய இயக்குநா் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் இதுதொடா்பாக விரிவாக விவாதித்தேன்.

சுங்கத் துறையின் ஒப்புதலுடன், கூரியா் சரக்குகளின் அளவு 250 மெட்ரிக் டன்னை எட்டும் வரை, விமான நிலையத்தில் ஏற்கெனவே உள்ள சா்வதேச சரக்குக் கையாளும் முனையத்தையே பயன்படுத்தி இச்சேவையை விரைந்து தொடங்குவதற்குத் தேவையான ஒப்புதல்களை வழங்கி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன்.

சுங்கத்துறை ஆணையரும் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளாா். எனவே, இந்தச் சேவை மிக விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என நம்புகிறேன் என துரை வைகோ தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.