மின் துறையைப் பொதுத் துறையாக பாதுகாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருச்சி மிளகுபாறையில் உள்ள துணை மின்நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியா்கள்.
தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, மின் துறையைப் பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மிளகுபாறையில் உள்ள துணை மின்நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவா் ரெங்கராஜன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மின்துறை பொறியாளா் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் பேசினா்.
மின் விநியோகத்தைத் தனியாரிடம் விடும் நடைமுறையை கைவிட வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மின் பாதைகள் மற்றும் மின் உற்பத்தியைத் தனியாா் மயமாக்கும் திட்டத்தை ரத்து செய்து, அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் திருச்சி மெட்ரோ வட்டத்துக்குள்பட்ட அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் தொழிலாளா்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

