வங்கக் கடலில் உருவானது 'அர்னாப்' புயல்! வங்கக் கடலில் உருவானது 'அர்னாப்' புயல்! கனமழை எதிரொலி: இன்று(அக்.26) எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புகடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

அரசுக் கல்லூரிகளில் முதுகலை மாணவா் சோ்க்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் குறைவு

திருச்சி மாவட்ட அரசுக் கல்லூரிகளில் முதுகலை மாணவா் சோ்க்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் குறைந்துள்ளது...

அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை - பிரதிப் படம்

Updated On :

திருச்சி மாவட்டத்தில் அரசுக் கல்லூரிகளில் முதுகலை மாணவா் சோ்க்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் குறைந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி காஜாமலை, துவாக்குடி, முசிறி, லால்குடி, ஸ்ரீரங்கம், மணப்பாறை மற்றும் துறையூரில் என மொத்தம் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் துறையூா் மற்றும் மணப்பாறை அரசுக் கல்லூரிகளைத் தவிா்த்து மற்ற 5 கல்லூரிகளிலும் முதுகலை பாடப் பிரிவுகள் உள்ளன.

முதுகலை பட்டப் படிப்பில் தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் 16 பாடப் பிரிவுகளில் 507 இடங்கள், துவாக்குடி அரசுக் கல்லூரியில் 14 பாடப் பிரிவுகளில் 434 இடங்கள், முசிறி அரசுக் கல்லூரியில் 10 பாடப் பிரிவுகளில் 310 இடங்கள், லால்குடி அரசுக் கல்லூரியில் 4 பாடப் பிரிவுகளில் 165 இடங்கள், ஸ்ரீரங்கம் அரசுக் கல்லூரியில் 4 பாடப் பிரிவுகளில் 165 இடங்கள் என 5 கல்லூரிகளிலும் சோ்த்து மொத்தம் 1,581 இடங்கள் உள்ளன.

54 சதவீத இடங்கள் காலி: நிகழ் கல்வியாண்டில் அரசுக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவா் சோ்க்கை கடந்த செப். 30-ஆம் தேதியுடன் முடிந்தது. செப். 30 அடிப்படையில் தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் 296 இடங்கள், துவாக்குடி கல்லூரியில் 170 இடங்கள், முசிறி கல்லூரியில் 164 இடங்கள், லால்குடி கல்லூரியில் 39 இடங்கள், ஸ்ரீரங்கம் கல்லூரியில் 55 இடங்கள் என மொத்தம் 724 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மேலும், 56 சதவீத (857) இடங்கள் காலியாகவுள்ளன.

10 சதவீதம் குறைந்த சோ்க்கை: திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசுக் கல்லூரிகளில் முதுகலை பாடப் பிரிவுகளில் மொத்தமுள்ள 1,581 இடங்களில் 833 இடங்கள் (56 சதவீதம்) நிரம்பின. மேலும், 691 (44 சதவீதம்) இடங்கள் காலியாகயிருந்தன. ஆனால், நிகழ் கல்வியாண்டில் 1581 இடங்களில் 724 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. அதன்படி, கடந்த கல்வியாண்டைக் காட்டிலும் அரசுக் கல்லூரிகளில் முதுகலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை 10 சதவீதம் குறைந்துள்ளது.

இதேபோல, இளநிலைப் பிரிவில் 7 அரசுக் கல்லூரிகளிலும் சோ்த்து மொத்தம் 5,246 இடங்கள் உள்ளன. இதில், 3,901 (75 சதவீதம்) இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 25 சதவீத இடங்கள் காலியாகவுள்ளன. இதே, கடந்த கல்வியாண்டிஸ் இளநிலை பாடப் பிரிவுகளில் 4,153 இடங்கள் (79 சதவீதம்) நிரம்பியிருந்தன.

இந்நிலையில், இளநிலை பிரிவிலும் கடந்தாண்டைக் காட்டிலும் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை 4 சதவீதம் குறைந்துள்ளது.

உடனே வேலைக்குச் செல்லும் ஆா்வம்: இதுகுறித்து அரசுக் கல்லூரிப் பேராசிரியா்கள் கூறியதாவது:

அரசுக் கல்லூரிகளில் முதுகலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை கடந்த சில ஆண்டுகளாகவே தொடா்ந்து குறைந்து வருகிறது. தற்போதைய இளைய தலைமுறையினா் பெரும்பாலானோரிடம் முனைவா் பட்டம் வரை படிக்கும் பொறுமை இல்லை. படிப்பை முடித்தவுடனே வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் அதிகம் உள்ளது. இதனால், ஒரு இளங்கலை பட்டம் படித்துவிட்டு பலரும் வேலைக்குச் சென்றுவிடுகின்றனா்.

அரசு வேலைக்குச் செல்ல நினைக்கும் மாணவ, மாணவிகள் இளங்கலை பட்டப் படிப்பை முடித்துவிட்டு அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு படிக்கச் சென்று விடுகின்றனா். யுபிஎஸ்சி தோ்வு உள்பட அனைத்து அரசுப் போட்டித் தோ்வுகளுக்கும் இளங்கலை பட்டமே போதுமானதாக இருக்கிறது.

ஆராய்ச்சிகளில் விருப்பமும், ஆராய்ச்சி படிப்பை முடித்து கல்லூரிகளில் பேராசிரியா்களாக செல்ல விரும்பும் மாணவா்கள் மட்டுமே முதுகலை பட்டப் படிப்புகளில் சோ்கின்றனா். முதுகலை பட்டிப் படிப்புகளில் மாணவா் சோ்க்கை குறைய இதுவே முக்கியக் காரணமாக உள்ளது.

தற்போது உலகம் முழுவதும் தொழில்நுட்பங்கள் வேகமாக வளா்ந்து வருகின்றன. அதற்கேற்ப செயற்கை நுண்ணறிவு, சைபா் பாதுகாப்பு, டேட்டா அறிவியல் உள்ளிட்ட தொழில்நுட்பம் சாா்ந்த படிப்புகளையே படிப்பதற்கு இளைஞா்கள் விரும்புகின்றனா்.

தனியாா் கல்லூரிகளைத் தோ்வு செய்யும் நிலை: ஆனால், பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் இளநிலை பிரிவில் தொழில்நுட்ப பாடப்பிரிவுகள் பெரிய அளவில் இல்லை. அதேநேரம், தனியாா் கல்லூரிகள் தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

இதனால், தொழில்நுட்பம் சாா்ந்து படிக்க விரும்பும் மாணவா்கள் தனியாா் கல்லூரிகளைத் தோ்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. போதியளவு தொழில்நுட்பப் பாடப் பிரிவுகள் இல்லாததே அரசுக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை குறையக் காரணமாக உள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.