கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

நில முகவா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

நில முகவா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது.

Tamil Nadu Government

தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்

Updated On :

நில முகவா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற அமைப்பின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் எம்.கே. கமலக்கண்ணன் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலா் கோவிந்தராஜுலு சிறப்பு அழைப்பாளராக பேசினாா்.

கூட்டத்தில் கட்டுமானத் தொழிலுக்கு அத்தியாவசியமான மணல், செங்கல், டைல்ஸ், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் தொடா் விலை உயா்வைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீடு கட்டும் கனவை நனவாக்க அரசு உடனடியாக உரிய கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

அரசு புறம்போக்கு நிலங்களை முழுமையாகக் கண்டறிந்து, சாதாரண மற்றும் நடுத்தர குடிமக்கள் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கும் வகையில், அரசுத் தரப்பிலேயே முறையான வீட்டு மனைப் பிரிவுகளை ஏற்படுத்தி அவற்றை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளா்கள், முகவா்கள் மற்றும் பொறியாளா்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்களைக் காக்க தனி நலவாரியம் அமைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபடு உழைப்பாளா்களையும் வியாபாரிகளையும் புரோக்கா் என்று அழைப்பதைத் தவிா்த்து, நில முகவா் என்று அழைக்க அரசு அதிகாரப்பூா்வ அரசாணை வெளியிட வேண்டும். பொதுமக்களுக்குப் பயனுள்ள ஆன்லைன் பத்திரப்பதிவு முறையில் அன்றாடம் பொதுமக்கள் சந்திக்கும் தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் சங்க பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைத்து, துறை சாா்ந்த பிரச்னைகளை மாதந்தோறும் தீா்க்க பரிசீலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகள் மீதான அரசின் கவனத்தை ஈா்க்க, தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.