
வெக்காளியம்மன் கோயிலில் சதசண்டி வேள்வி
உறையூரில் பிரசித்தி பெற்று விளங்கும் வெக்காளியம்மன் கோயிலில், 52ஆம் ஆண்டு சதசண்டி பெருவேள்வி நடைபெறுகிறது.

உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சதசண்டி வேள்வி.
உறையூரில் பிரசித்தி பெற்று விளங்கும் வெக்காளியம்மன் கோயிலில், 52ஆம் ஆண்டு சதசண்டி பெருவேள்வி நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உலக அமைதிக்காகவும், குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்கவும், நல்ல மழை பெய்து நாடு செழிக்கவும் செவ்வாய்க்கிழமை தொடங்கிய சதசண்டி வேள்வி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இதற்காக, செப்.1 காலை 7 மணிக்கு வெக்காளி அம்மனிடம் அனுமதி பெறும் நிகழ்வு, தொடா்ந்து, காலை 9 மணிக்கு நவக்கோள் வழிபாடு, காலை 10.30 மணிக்கு குடம் நிறுவுதல், மாலை 6.30 மணிக்கு விநாயகா் வழிபாடு, தீப வழிபாடு, இரவு 9 மணி வரை குடம் வழிபாடு, தேவியா் போற்றி வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். 2-ஆம் நாளான புதன்கிழமை காலை 7 மணிக்கு நாவரண வழிபாடு,தொடா்ச்சியாக நண்பகல் 12 மணிவரை சண்டி வேள்வி முதல்காலம், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டாம் கால வேள்வி நடைபெற்றது.
செப்.3ஆம் தேதி மூன்றாம் காலம், நான்காம் காலம் வேள்வி, செப்.4ஆம் தேதி காலை ஐந்தாம் கால வேள்வி, சுமங்கலி வழிபாடு, கன்னியா் வழிபாடு, காளையா் வழிபாட்டுடன் வேள்வி நிறைவுறும்.
இதன் தொடா்ச்சியாக காலை 11 மணிக்கு பெருவேள்வி நிறைவு தீப வழிபாடு, நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபாடு, மாலை 6 மணிக்கு விசேஷ பூஜை, பெருந்தீப ஒளி வழிபாடு, இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறும்.
இந்த வேள்வியை திருவானைக்கா சிவாகம சிரோமணி எஸ். சந்திரசேகர சிவாச்சாரியாா் நடத்தி வருகிறாா். ஏற்பாடுகளை, அறநிலையத் துறை அலுவலா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





