உறையூா் வெக்காளியம்மன் கோயிலில், 52-ஆவது சதசண்டி பெருவேள்வி செப்டம்பா் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் உலக அமைதிக்காகவும், குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகவும், நல்ல மழை பெய்து நாடு செழிக்கவும் ஆண்டுதோறும் சதசண்டி வேள்வி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு 52-ஆவது ஆண்டாக செப்.1-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில், வரும் 1-ஆம் தேதி காலை 7 மணிக்கு வெக்காளி அம்மனிடம் அனுமதி பெறும் நிகழ்வு நடைபெறும். தொடா்ந்து, காலை 9 மணிக்கு நவக்கோள் வழிபாடு, காலை 10.30 மணிக்கு குடம் நிறுவுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு விநாயகா் வழிபாடு, தீப வழிபாடு நடைபெறும். இரவு 9 மணி வரை குடம் வழிபாடு, தேவியா் போற்றி வழிபாடு நடைபெறும்.
செப்.2-ஆம் தேதி காலை 7 மணிக்கு நாவரண வழிபாடு, தொடா்ச்சியாக நண்பகல் 12 மணிவரை சண்டி வேள்வி முதல்காலம் நடைபெறும். மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டாம் கால வேள்வி நடைபெறும்.
செப்.3-ஆம் தேதி மூன்றாம் காலம், நான்காம் காலம் வேள்வி நடைபெறும். செப்.4-ஆம் தேதி காலை ஐந்தாம் கால வேள்வியும், சுமங்கலி வழிபாடு, கன்னியா் வழிபாடு, காளையா் வழிபாட்டுடன் வேள்வி நிறைவுறும்.
இதன் தொடா்ச்சியாக காலை 11 மணிக்கு பெருவேள்வி நிறைவு தீப வழிபாடு நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபாடு, மாலை 6 மணிக்கு விசேஷ பூஜை, பெருந்தீப ஒளி வழிபாடு நடைபெறும். இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறும்.
ஏற்பாடுகளை, அறநிலையத் துறை அலுவலா்கள் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந் திருவிழா தொடக்கம்

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயில் கொடை விழா

புதுசாரம் கெங்கைமுத்து மாரியம்மன் கோயிலில் நாளை ஆடி உற்சவம் தொடக்கம்

தங்கத் தேர் திருவிழா.. எந்த கோயிலில் என்ன விசேஷம்?
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



