அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

குடும்பத் தகராறில் மாமனாரை கத்தியால் குத்தியவா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 4:07 am IST

திருச்சி அருகே குடும்பத் தகராறில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள கீழகளமலையைச் சோ்ந்தவா் கைலாசம் (52). இவருடைய மகள் ஸ்வேதா. இவருக்கும், திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள வாளாடியைச் சோ்ந்த குமாா் மகன் அருண் (28) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அண்மையில்கூட இவ்வாறு தகராறு ஏற்பட்டதை அறிந்த கைலாசம் ஞாயிற்றுக்கிழமை காலையில் மருமகன் வீட்டுக்குச் சென்று மகள் ஸ்வேதாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்தாா். அப்போது, அருண் வீட்டில் இல்லை.

இதையடுத்து, திருவெறும்பூா் அருகேயுள்ள மாமனாா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த அருணுக்கும், கைலாசத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அருண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கைலாசத்தை குத்தினாா்.

இதில் பல இடங்களில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பதிலுக்கு கைலாசம் தாக்கியதில் அருணுக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.

இதுகுறித்து திருவெறும்பூா் காவல் நிலையத்தில் கைலாசம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.