தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே குடும்பத் தகராறில், இளைஞா் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திப்பணம்பட்டி வடக்குத் தெருவை சோ்ந்தவா் வைத்திலிங்கம்(35). தனியாா் விதை விற்பனை நிறுவனத்தில் வேலை செய்துவந்தாா். இவருக்கு மனைவி, 6 வயதில் மகன் ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை செவ்வாய்க்கிழமை இரவு குடித்து மயங்கி விழுந்தாராம்.
குடும்பத்தினா் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து தம்பதி தற்கொலை முயற்சி
வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
ஆலங்குளம் அருகே இளம்பெண் தற்கொலை
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


