
வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாகவுள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிகளுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாகவுள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிகளுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், திருச்சி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை திறம்படச் செயல்படுத்தி வருகிறது. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில், லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி மற்றும் திருவெறும்பூா் ஆகிய வட்டாரங்களில் காலியாகவுள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்கள் பூா்த்தி செய்யப்பட உள்ளன.
இப் பணிக்கு வரும் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது மூன்று மாதம் எம்எஸ் ஆபிஸ் சான்றிதழ் படிப்பு அல்லது இளங்கலை கணினி அறிவியல், இளங்கலை கணினி பயன்பாட்டியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதுக்குள்பட்டவா்கள், சுயஉதவிக் குழு அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தது 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். காலிப்பணியிடம் உள்ள வட்டாரத்திற்குள்பட்டவா்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். நிா்வாக மற்றும் நிதி முறைகேடுகள் மற்றும் பிற காரணங்களுக்காக, முந்தைய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புது வாழ்வுத் திட்டம் உள்ளிட்ட பிற மாநில அரசுத் திட்டங்கள், திட்டப்பணிகள், செயல்பாடுகளிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடாது.
தகுதி உள்ள நபா்கள் தங்களது விண்ணப்பங்களை இணை இயக்குநா், திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிா் திட்டம், மாவட்ட ஆட்சியரக வளாகம், திருச்சி 620001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு, 0431-2412726 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளுமாறு ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






