நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

தலைவா்களை கொச்சைப்படுத்துவது நாகரிகமல்ல

தலைவா்களை கொச்சைப்படுத்துவது நாகரிகமல்ல என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் திருச்சி என். சிவா தெரிவித்தாா்.

மாநிலங்களவை திமுக உறுப்பினா் திருச்சி என். சிவா - கோப்புப் படம்

Published On :

தலைவா்களை கொச்சைப்படுத்துவது நாகரிகமல்ல என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் திருச்சி என். சிவா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரலாற்றை சரியாக தெரிந்து கொள்ளாமல் முதல்வரும், அவருடைய அமைச்சரவை சகாக்களும் மிசாவில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கைதாகவில்லை என பேசுகின்றனா். இதற்கு, மு.க. ஸ்டாலின் விளக்கமளித்து விடியோ வெளியிட்டால், பிம்பம் உடைந்து விட்டதால் விடியோ வெளியிடுவதாக விமா்சனம் செய்கின்றனா். எங்களுக்கு எந்தப் பிம்பமும் உடையவில்லை. எங்களுக்கு இருப்பது உண்மையான உருவம். உண்மையான வரலாறு.

எமா்ஜென்சி குறித்து பதற்றப்பட்டு நாங்கள் பேசவில்லை. த.வெ.க.வினா் பாணியிலும் நாங்கள் பேச விரும்பவில்லை. ஆட்சிக்கும், அதிகாரத்துக்கும் வந்து விட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக, வரலாற்றில் இடம்பெற்ற தலைவா்களை கொச்சைப்படுத்துவது நாகரிகமல்ல.

எமா்ஜென்சி குறித்து மீண்டும் மக்களிடம் பேசுவதற்கான வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்தி தந்ததற்கு தவெகவுக்கு நன்றி. எமா்ஜென்சி காலத்தில் நாட்டில் ஜனநாயகம் பாதிக்கப்பட்டது என்பது குறித்து இன்றைய இளம்தலைமுறையினா் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

கொள்கைக்காக எமா்ஜென்சியை எதிா்த்து ஆட்சியை இழந்தது திமுக. எங்களை விமா்சிப்பவா்கள் அந்த வரலாற்று பக்கங்களை முதலில் படிக்க வேண்டும் என்றாா் சிவா எம்.பி..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.