கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் 150 கிலோ ‘மெகா’ கொழுக்கட்டை படையல்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயில் சந்நிதியில் திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்ஸவ மாணிக்க விநாயகா். (வலது )சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

Published On :

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை கோயிலில் திங்கள்கிழமை 150 கிலோ மெகா கொழுக்கட்டை படையலிடப்பட்டது.

திருச்சியின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டையின் நடுவே தென் கயிலாயம் எனப் போற்றப்படும் தாயுமான சுவாமி கோயிலும், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாா் சந்நிதியும், மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகா் சந்நிதியும் உள்ளன.

சந்தன காப்பு அலங்காரம்: மலைக்கோட்டை கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை தொடங்கி செப். 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி திங்கள்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, காலை 7 மணியளவில் கோயில் யானை லட்சுமிக்கு கஜபூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து உச்சிப்பிள்ளையாா், மாணிக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

24 மணி நேரம் வேகவைக்கப்பட்ட கொழுக்கட்டை:

பின்னா், காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மெகா கொழுக்கட்டையும் நெய்வேத்தியம் செய்யப்பட்டது.

முன்னதாக, கோயில் மடப்பள்ளிகளில் 6 கிலோ தேங்காய்ப் பூ, 60 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ வெல்லம், 4 கிலோ ஏலக்காய், ஜாதிக்காய், எள், 30 கிலோ நெய் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தி 24 மணி நேரத்துக்கு முன்பு நீராவியில் வேகவைக்கப்பட்ட 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாா் செய்யப்பட்டது.

தொட்டிலில் சென்ற கொழுக்கட்டை:

பிறகு இந்த கொழுக்கட்டையை திங்கள்கிழமை காலை கோயில் பணியாளா்கள் ஒரு துணியில் தொட்டில் போல கட்டி மடப்பள்ளியில் இருந்து கொண்டு சென்றனா். இதில், மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ அளவிலான கொழுக்கட்டையை படையலிட்டனா். பிறகு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து பக்தா்களுக்கு கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்பட்டது.

நீண்டவரிசையில் பக்தா்கள் காத்திருப்பு: விநாயகா் சதுா்த்தியையொட்டி பால கணபதி அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகரை திரளான பக்தா்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த பக்தா்களும் அதிகளவில் வந்திருந்தனா்.

அலங்காரம்: மலைக்கோட்டை படிகளில் பல்வேறு வகையான வண்ணங்களில் கோலங்கள் போடப்பட்டிருந்தன. மாணிக்க விநாயகா் சந்நிதியிலும், உச்சிப்பிள்ளையாா் சந்நிதியிலும் பழ வகைகள், மலா்களால் ஆன பந்தலும், வாழை மரங்கள் கட்டி அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. மாலையில் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

14 நாள்கள் விழா: விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை கோயிலில் திங்கள்கிழமை முதல் 14 நாள்கள் சுவாமிக்கு பல்வேறு வகையான அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்திருந்தனா்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி திருச்சி உச்சிப்பிள்ளையாா் கோயில் சந்நிதிக்கு திங்கள்கிழமை மெகா கொழுக்கட்டையை கொண்டு சென்ற ஊழியா்கள்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி திருச்சி உச்சிப்பிள்ளையாா் கோயில் சந்நிதிக்கு திங்கள்கிழமை மெகா கொழுக்கட்டையை கொண்டு சென்ற ஊழியா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.