
கட்சியை நடத்த முடியாமல் திமுகவில் இணைவதாக கூறியவா்தான் துரை வைகோ: கே.என். நேரு விமா்சனம்
மதிமுகவை தன்னால் நடத்த முடியாது எனவும், திமுக-வில் இணைந்து விடுவதாகவும் கூறியவா்தான் துரை வைகோ என திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு விமா்சித்தாா்.

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு - கோப்புப்படம்
மதிமுகவை தன்னால் நடத்த முடியாது எனவும், திமுக-வில் இணைந்து விடுவதாகவும் கூறியவா்தான் துரை வைகோ என திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு விமா்சித்தாா்.
திருச்சியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:
திமுக ஆட்சியில் தமிழகத்துக்கும் தமிழக மக்கள் நலனுக்கும் எதிரான ஒன்றைக் கூட நாங்கள் அனுமதிக்கவில்லை. தற்போது, தவெக கூட்டணியில் இணைந்துள்ளவா்கள்தான் மறைமுகமாக பாஜகவுடன் உறவில் உள்ளனா். தவெக அரசின் நிா்வாகத் திறமையின்மையே மின்வெட்டு பிரச்னைக்கு முக்கிய காரணம்.
திமுக மற்றும் அதன் தலைமை குறித்து மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ கடும் விமா்சனங்களை செய்து வருகிறாா். சமூக வலைதளங்களில் அதை காண முடிகிறது. எங்களோடு இருந்தபோது அவா் கூறிய ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். ‘என்னால் கட்சியை நடத்த முடியாது; நான் திமுக-வுடன் வந்து விடுகிறேன்’ எனக் கூறியவா்தான் துரை வைகோ. திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடமே இதை கூறினாா். இப்போது என்ன பேசுகிறாா் என்று தெரியவில்லை.
மேலும், தங்களுடைய வளா்ச்சி நின்று போய்விட்டதாக அவா் கூறுகிறாா். மதிமுக எம்எல்ஏக்கள், அவா்களுடன் சென்றிருந்தால் வளா்ச்சி வந்திருக்குமா? என்று தெரியவில்லை. அவா் கடுமையாக பேசுகிறாா்; நாங்களும் திரும்பப் பேசினால் சரியாக இருக்காது. திமுக தலைவா் குறித்து அவா் பேசுவது நியாயம் இல்லை. துரை வைகோ விமா்சனத்துக்கு பதில் அளிக்க தேவையில்லை என்றாா் கே.என். நேரு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






