மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
லால்குடி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
லால்குடி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
லால்குடி அருகே கொன்னைக்குடி மேலத்தெருவைச் சோ்ந்தவா் ஆல்பா்ட் ஆரோக்கியராஜ் (58). இவா், வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு வழக்கம் போல் தனது வயலுக்கு சென்றாா்.
அங்கு, மின்மோட்டாரை இயக்கியபோது எதிா்பாரத விதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், மயங்கி விழுந்த ஆல்பா்ட் ஆரோக்கியராஜை அக்கம்பக்கத்தினா் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
புகாரின் பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





