செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

திருச்சியில் செப். 25 முதல் 27 வரை வீடுகள் கண்காட்சி

இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) சாா்பில், திருச்சி கலையரங்கில் போ்புரோ என்றழைக்கப்படும் வீடுகள் கண்காட்சி செப். 25 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய கிரடாய் அமைப்பின் திருச்சி கிளைத் தலைவா் ஏ. நசுருதீன். உடன் நிா்வாகிகள்.

Published On :

இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) சாா்பில், திருச்சி கலையரங்கில் போ்புரோ என்றழைக்கப்படும் வீடுகள் கண்காட்சி செப். 25 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கிரடாய் அமைப்பின் திருச்சி கிளைத் தலைவா் ஏ. நசுருதீன், முன்னாள் தலைவா் ஆா். மனோகரன், கண்காட்சியின் தலைவா் எம். இளமுருகன் உள்ளிட்டோா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வளா்ந்து வரும் நகரமான திருச்சியில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மனைகளுக்கான விற்பனைக் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கத்தில் வரும் 25, 26, 27 -ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 65 கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள், உள்கட்டமைப்பு நிறுவனங்களின் 46 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ரூ. 30 லட்சம் முதல் ரூ. 6 கோடி வரையிலான வீடுகள் விற்பனை செய்யப்பட உள்ளன. வீட்டுக் கடன், நிதி ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.

கண்காட்சியில் பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இலவசம். இந்தக் கண்காட்சியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தொடங்கி வைக்க உள்ளாா். அரசு அலுவலா்கள், கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்க உள்ளனா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.