நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம்

ரயிலில் மதுபானங்கள் எடுத்துச்சென்ற இருவா் கைது

திருச்சியில் ரயிலில் சட்டவிரோதமாக மதுபானங்கள் எடுத்துச்சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

திருச்சியில் ரயிலில் சட்டவிரோதமாக மதுபானங்கள் எடுத்துச்சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மும்பையில் இருந்து மதுரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண். 22101) வியாழக்கிழமை பிற்பகல் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது, அந்த ரயிலில் திருச்சி இருப்புப் பாதை போலீஸாா் மற்றும் கண்டோன்மென்ட் போலீஸாா் இருவரும் இணைந்து சோதனை மேற்கொண்டனா்.

அதில், திண்டுக்கல் மாவட்டம், நிலகோட்டையைச் சோ்ந்த பா. அருண் (22), எஸ். விக்னேஷ் (22) ஆகிய இருவரும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வெளி மாநில மதுபான வகைகளைச் சோ்ந்த 19 மதுபாட்டில்களை சட்டவிரோதமாக ரயிலில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் ரயில்வே போலீஸாா் கைது செய்து கண்டோன்மென்ட் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.