ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களில் மகசூலை எப்படி அதிகரிப்பது?

ஆரணி: தற்போது பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பயிர்களில் மகசூலை அதிகரிக்கும் வழி முறைகள் குறித்து ஆரணி வேளாண்மை துறை துணை இயக்குநர் செல்வராஜ் யோசனை கூறியுள்ளார்.

Updated On :20 செப்டம்பர் 2012, 9:30 am

ஆரணி: தற்போது பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பயிர்களில் மகசூலை அதிகரிக்கும் வழி முறைகள் குறித்து ஆரணி வேளாண்மை துறை துணை இயக்குநர் செல்வராஜ் யோசனை கூறியுள்ளார்.

நீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்: பயிருக்கு தேவையான சத்துகளாகிய போரான், இரும்பு, மாங்கனீசு, தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகியவை விரைவாக நீரில் கரைந்து விரயமாகி விடுவதால் பயிர்களின் வளர்ச்சி குன்றும்.

  மேலும் தண்ணீர் தேங்கிய நிலையில் வேர்களின் வளர்ச்சிக்குத் தேவையான பிராண வாயு கிடைக்காது. இதனால் வேர்களின் வளர்ச்சி பாதிப்படைந்து பயிர்களின் வளர்ச்சியும் குறைகிறது.

  மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் குறைந்து பயிருக்கு தேவையான சத்துகள் கிடைக்காது. மண் அதிகம் குளிர்ந்து விடுவதால் பயிர்களுக்கு தேவையான உரங்களை எடுத்துக்கொள்ளும் திறன் பயிர்களுக்கு குறைகிறது.

நிவர்த்தி செய்யும் முறைகள்: தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வடிகால் வசதியை உடனே மேற்கொள்ள வேண்டும்.   நீர் வடிந்ததும் தழைச்சத்து உரத்தை அம்மோனியம் வடிவில் தேவைப்பட்டால் சூழ்நிலைக்கு ஏற்ப இடவேண்டும்.   யூரியா இடுவதாக இருந்தால் ஒரு கிலோ யூரியாவிற்கு 3 கிலோ ஜிப்சம், 5 கிலோ மண் என்ற விகிதத்தில் கலந்து இடுவது சிறந்தது.

 மணிச்சத்து பற்றாக்குறையை தவிர்க்க 2 சதவீதம் டி.ஏ.பி. கரைசலை தொழில்நுட்ப அலுவலர்களின் ஆலோசனையின் பேரில் தெளிக்கவும்.

 சாம்பல்சத்து பற்றாக்குறை தென்பட்டால் ஒரு சதவீதம்ம் பொட்டாஷ் கரைசலை இலை வழியாக கைத்தெளிப்பான் கொண்டு தெளிப்பது சிறந்தது.

 ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் இடுவதால் பயிர் நன்கு தூர்கட்டி கிளைப்புகள் அதிகமாகும்.

 மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.