கிருஷ்ணகிரி, ஜூன் 11: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாதத்துக்கு சராசரியாக 10-க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இறப்பதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 5 மாதங்களாகக் கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படாததால் இந்நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கால்நடைகளின் இழப்பை ஈடுசெய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 3.57 லட்சம் மாடுகள் உள்ளன. இதில் 18,234 எருமை மாடுகளும் அடங்கும். இவற்றில் ஒரு சதவீதம் உழவு மாடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளாகப் பருவ மழை பொய்த்து வந்த நேரத்தில், விவசாயிகளுக்கு இந்த கறவை மாடுகளே பெரிதும் கைகொடுத்தன.
ஆனால், ரத்த சோகை நோய், கால் கோமாரி, அம்மை, குந்த மற்றும் மடிவீக்கம் போன்ற நோய்களால் கால்நடைகள், குறிப்பாக கறவை மாடுகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. கால்நடை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பல்வேறு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டாலும், மாடுகள் இறப்பு குறையவில்லை.
கடந்த ஒரு மாதத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் மலையாண்டஅள்ளி, காட்டாகரம் கிராமங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்தன. திடீரெனத் தாக்கும் நோய்களுக்கு இவை பலியாகின்றன. பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்து வந்த மாடுகள் இறப்பதால், விவசாயிகளின் பொருளாதாரச் சூழலில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது.
இதைத் தடுக்க, ஏற்கெனவே கால்நடைகளுக்குக் காப்பீடு செய்யும் திட்டத்தை அரசு அறிவித்திருந்தது. அதில், காப்பீட்டுத் திட்டத்தின் தொகையை 50 சதவீதம் மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. மீதத் தொகையை கால்நடை பராமரிப்புத்துறை வழங்குகிறது.
கால்நடைகளின் மதிப்பீட்டை அப்பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் நிர்ணயிக்கின்றனர். பொதுவாக, கறவை மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மதிப்பீடு செய்யப்பட்டு, காப்பீடு செய்யப்படுகிறது. ரூ.10 ஆயிரம் காப்பீடுக்கு ஆண்டுக்கு ரூ.356 காப்பீட்டுத்தொகை வசூலிக்கப்படுகிறது.
இதில் வரிகள் உள்பட ரூ.212 மட்டும் விவசாயி செலுத்தினால் போதுமானது. காப்பீடு செய்யப்பட்ட கால்நடை இறக்க நேரிட்டால், விவசாயிகளுக்கு காப்பீடு தொகை முழுமையாக கிடைக்கும்.
"கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நிகழாண்டில் 5 ஆயிரம் பேரின் கால்நடைகளுக்கு காப்பீடு செய்துதர இலக்கு நிர்ணயித்திருந்தும், தற்போதுவரை காப்பீடு செய்துதரப்படவில்லை. இதனால், கடந்த 5 மாதங்களில் இறந்த கால்நடைகளுக்கு விவசாயிகள் காப்பீடு பெறவில்லை.
மாதத்துக்கு சராசரியாக 10 முதல் 15 மாடுகள் உயிரிழக்கின்றன. இது ஆண்டுக்கு 120 முதல் 170 வரை இருக்கிறது. கால்நடைகள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், அவற்றுக்கான இழப்பீடு தொகை விவசாயிகளுக்கு கிடைத்திருக்கும்.
வேறு கால்நடைகள் வாங்க அத்தொகை உதவியாக இருக்கும். ஆனால், நிகழாண்டில் இழப்பீடுத் திட்டம் அமல்படுத்துவதில் தாமதம் நீடிப்பதால், விவசாயிகள் பாதிக்க நேரிடுகிறது' என்று விவசாயிகள் கூறினர்.
மேலும், இதுதொடர்பாக விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், இத்திட்டத்தில் சேரும் விவசாயிகள் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. இவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியையும் அரசு செய்யுமானால், கறவை மாடுகளை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகள் ஏராளமானோர் இத்திட்டத்தின்கீழ் பயனடைய முடியும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

