வேலூர், ஜூன் 23: சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு 3 மாதங்களாகியும், கவுன்சலிங் நடத்தப்படாமல் 1,122 பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காகத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தவர்களில் பதிவு மூப்பு அடிப்படையில், சுமார் 6,000 பேருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இவர்களது சான்றிதழ்கள் 2009 நவம்பர் 2-ம் தேதி சரிபார்க்கப்பட்டன. அதன்பின், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் பட்டியல் டிசம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட்டது.
பின்னர், இவர்களில் தேர்வு செய்யப்ட்ட 1,122 பேர் பட்டியல் இந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி வெளியிடப்பட்டது.
மேலும், தேர்வு செய்யப்பட்ட கடிதம் ஏப்ரல் 3-ம் தேதி சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், மூன்று மாதங்களாகியும் தற்போது வரை இவர்களுக்குக் கவுன்சலிங் நடத்தப்படாமல் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால், பணியிட உத்தரவு கைக்கு கிடைக்கவில்லை.
ஆசிரியர் பணிக்கான தேர்வுக் கடிதம் கிடைத்ததும், ஏற்கெனவே பணிபுரிந்து வந்த இடத்திலிருந்து வேலைகளை விட்டுள்ளனர். வரும் ஜூன் மாதம் முதல் பள்ளிகளில் பணியாற்ற உத்தரவு கிடைத்துவிடும் என்று நம்பியிருந்த இவர்களுக்கு தற்போதுவரை கவுன்சலிங் நடத்துவதற்கான அழைப்புக் கடிதம் வரவில்லை. ஆனால், புதிதாக 6,400 பேருக்கு கடந்த மே 12-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிந்துள்ளது. மேலும், புதிதாக 8 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 1,122 பேரில் பலர் 50 முதல் 56 வயதுக்குள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கவுன்சலிங் நடத்துவதற்கு முன்னரே இவர்களில் பலர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.
இந் நிலையில் இவர்கள் அரசின் நடவடிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

