தீப்பெட்டித் தொழில் பாதிப்பு

குடியாத்தம், நவ. 29: தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர் மழையால் தீப்பெட்டித் தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதேபோல், கைத்தறி நெசவு மற்றும் பீடித் தொழில்களும் பாதி
Updated on
1 min read

குடியாத்தம், நவ. 29: தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர் மழையால் தீப்பெட்டித் தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதேபோல், கைத்தறி நெசவு மற்றும் பீடித் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

 இந்தியாவின் மொத்தத் தேவையில் 80 சதவீத தீப்பெட்டிகள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் சாத்தூர், விருதுநகருக்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது குடியாத்தம் பகுதியில்தான்.

 குடியாத்தம் மற்றும் சுற்றுப் பகுதியில் 14 பகுதி இயந்திர தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களும், 250-க்கும் மேற்பட்ட கையினால் தயாரிக்கும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

ஈரத்துடன் வந்த குச்சிகள் வீணானது:

 தீப்பெட்டித் தயாரிக்க தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான தீக்குச்சிக்காக 80 சதவீதம் கேரளத்திலிருந்தும், 3 சதவீதம் கர்நாடகத்திலிருந்தும் மரங்கள் வாங்கப்படுகின்றன. எஞ்சிய 17 சதவீத மரங்கள் மட்டும் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கின்றன.

 மழை காரணமாக கேரளத்தில் மரக் குச்சிகளை காய வைக்க முடியவில்லை. அங்கிருந்து தமிழக வியாபாரிகள் வாங்கி வந்த மரக்குச்சிகள் காயாமல் ஈரத்துடன் வந்தன. இதனால் அவற்றில் 10 சதவீதத்துக்கு மேல் கழிவாகி விட்டது.

 இறக்குமதி செய்யப்பட்ட குச்சிகள் அதிக ஈரமாக இருந்ததால் பூஞ்சான் பிடித்து கருப்பு நிறமாக மாறி தீக்குச்சி தயாரிக்க முடியாமல் வீணாகி விட்டன. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தொழிலாளர்களும் பாதிப்பு:

 இதுகுறித்து பகுதி தீப்பெட்டி இயந்திர உற்பத்தியாளர் சங்கச் செயலர் வி.வி. ராஜன் கூறியது:

 மழை காரணமாக பல கோடி ரூபாய் உற்பத்தி இழப்பும், ஈரமான மரக்குச்சிகளால் லட்சக்கணக்கில் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. தொழில் முடக்கம் ஏற்பட்டதால் இத்தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாஹக மாறியுள்ளது என்றார்.

 இதேபோல் மழை காரணமாக குடியாத்தம் பகுதியில் கைத்தறி லுங்கி உற்பத்தியும், பீடித் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நெசவாளர்களும், பீடித் தொழில் செய்வோரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com