திருவண்ணாமலை, ஜன. 8: செங்கம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகப் போட்டி பரிசளிப்பு விழா பெரியகோளப்பாடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகங்கள் வார விழாவை முன்னிட்டும், கிராம மக்கள் மத்தியில் நூலகம் சென்று படிக்கும் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கவிதை, விவாதம், கட்டுரை, நடனம், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஊராட்சித் தலைவர் தருமன் தலைமை தாங்கினார். செங்கம் ஒன்றியக் குழுத் தலைவர் ஜி.குமார் வென்றவர்களுக்கு பரிசளித்தார்(படம்). ஒன்றிய ஆணையர் பரிதிமால் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் தேவதாஸ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.