வாலாஜாபேட்டை,பிப். 10:
சோளிங்கர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர் (படம்).
சோளிங்கர் - பானாவரம் கூட்டுச்சாலை அருகே நடந்த மறியல் போராட்டத்துக்கு பாஜக ஒன்றியத் தலைவர் சுந்தரம், சிறுதொழில் அதிபர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சோளிங்கர் பகுதியில் முன்னறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் பதில் அளிப்பதில்லை என அப்போது புகார் கூறினர். தகவல் அறிந்த சோளிங்கர் காவல் ஆய்வாளர் அருணாசலம் தலைமையிலான போலீஸôர், அங்கு விரைந்து சென்று சமரச முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.