வேலூர், பிப். 10: வேலூர் கோட்டை நாணய சங்கம் மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பாளர் சங்கம், உதவும் உள்ளங்கள் சார்பில் நகர அரங்கில் 3 நாள்கள் நடைபெறும் நாணயம் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாநகர மேயர் பா.கார்த்தியாயினி கண்காட்சியை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் 28 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் அஞ்சல் தலைகள், நாணயங்கள் சேகரிப்போருக்கு அரியவகை நாணயங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
உலகில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இங்கிலாந்து நாட்டின் தபால்தலை, 1.4 செ.மீ. உயரமுள்ள பிரேசில் நாட்டை சேர்ந்த உலகிலே சிறிய தபால் தலை உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
துணை மேயர் வி.டி.தர்மலிங்கம், வேலூர் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஆர்.சந்தானராமன், உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவர் ரா.சந்திரசேகரன், சி.தமிழ்வாணன் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பேசினர்.