ஆமை வேகத்தில் புறவழிச்சாலை பணி!
வந்தவாசி, ஜூன் 29: வந்தவாசி புறவழிச்சாலை அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. திருவண்ணாமலை, போளூர், செங்கம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிக


வந்தவாசி, ஜூன் 29: வந்தவாசி புறவழிச்சாலை அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
திருவண்ணாமலை, போளூர், செங்கம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் காஞ்சிபுரம், உத்திரமேரூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தவாசி வழியாகச் செல்கின்றன.
திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் தென்மாவட்டங்களிலிருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஆரணி, செய்யாறு, வேலூர், சித்தூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு வந்தவாசி வழியாகச் செல்கின்றன.
வந்தவாசி பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் கரும்புகளை டிராக்டர், லாரிகளில் ஏற்றிக் கொண்டு வந்தவாசி வழியாகச் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குச் செல்கின்றனர்.
இதனால் வந்தவாசி நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே வந்தவாசி நகரைச் சுற்றி புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து வந்தவாசி-ஆரணி, வந்தவாசி-செய்யாறு சாலைகளை வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையுடன் இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூ.3.50 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் 2011-ல் தொடங்கப்பட்டது. இப்பணிகள் தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் முடியவில்லை.
இந்த புறவழிச்சாலை சுமார் 2.2 கி.மீ. நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இதில் 9 சிறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4 சிறுபாலங்களின் மீது தார்ச்சாலை அமைக்கும் பணி நிலுவையில் உள்ளது. மேலும் 43 மீ. நீளமும் 12 மீ. அகலமும் கொண்ட பெரிய பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலமும் இன்னும் முழுமை பெறவில்லை. மேலும் இச்சாலையின் இடையில் நிலுவையில் விடப்பட்ட சுமார் 200 மீ. சாலைப் பணிகள் இப்போதுதான் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த காலதாமதம் வந்தவாசி நகர வாசிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
பணிகளை விரைந்து முடித்து புறவழிச்சாலையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...