உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

ஆம்பூரில் சிறுமி காணவில்லை

ஆம்பூரில் காணாமல் போன சிறுமியை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :12 மே 2013, 5:43 am IST

ஆம்பூரில் காணாமல் போன சிறுமியை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஹாருன் அஹமத்.  இவருக்கு ரஹமத்துன்னிசா (4), இரண்டரை வயது ருக்சார் பேகம்  ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இருவரும் வழக்கம்போல வெள்ளிக்கிழமை அங்குள்ள அங்கன்வாடி மையத்துக்குச் சென்றுள்ளனர். பிற்பகல் 12.30 மணி வீட்டுக்குப் புறப்பட்டுள்ளனர்.

வழியில் ஐஸ் வாங்கித் தருமாறு ருக்சார் பேகம் கேட்டாராம். இதையடுத்து, அவரை அங்கேயே நிற்கவைத்துவிட்டு ரஹம்மத்துன்னிசா வீட்டுக்குச் சென்று சென்றுள்ளார்.  திரும்பி வந்து பார்த்தபோது ருக்சார்பேகம் காணவில்லை.

தகவலின்பேரில் டிஎஸ்பி இ. விஜயகுமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.  இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இதுதொடர்பாக அங்கன்வாடி மையங்களை கண்காணிக்கும் துறையின் அதிகாரி பாக்கியராஜ் சனிக்கிழமை மைய அமைப்பாளர் மாதவியிடம் விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.