கணவர் 2-வது திருமணம் செய்வதற்கு முயற்சிப்பதோடு, உறவினர்கள் மூலம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தனியார் கல்லூரி பேராசிரியை எல்.சுமி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் அளித்த புகார் விவரம்:
நான் வேலூர் ஓட்டேரியில் வசித்து வருகிறேன். என் கணவர் புவனேந்திரா (எ) மோகன் வேறொரு பெண்ணுடன் சென்னையில் இருந்தார். காவல் துறை உதவியுடன் அவரை மீட்டு வேலூருக்கு அழைத்து வந்தேன்.
இந்நிலையில், அவர் திடீரென தலைமறைவாகியுள்ளார். அவரது உறவினர்களை தொடர்புகொண்டபோது, அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்கப் போவதாகவும், இடையூறு செய்தால் கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டுகிறார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினர் மோதலில்
4 பேர் காயம்; 5 பேர் கைது
வாலாஜாபேட்டை,மே 11: சோளிங்கர் அருகேயுள்ள ஐம்புகுளத்தில் வெள்ளிக்கிழமை இரவு இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில், 4 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்கள், கம்புகளால் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில், பழனி என்பவரின் கடை சேதம் அடைந்தது. கல்வீச்சில் ஐம்புகுளத்தைச் சேர்ந்த பழனி (37), குணசீலன் (40), கார்மேகம் (23), ராமமூர்த்தி (50) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். தகவலின்பேரில் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி, டிஎஸ்பிக்கள் சீத்தாராமன்(அரக்கோணம்), லாவண்யா (ராணிப்பேட்டை) உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக சோளிங்கர் போலீஸார் வழக்குப் பதிந்து, ஐம்புகுளத்தைச் சேர்ந்த பெரியசாமி (52), சேகர் (48), நவீன்குமார் (22), ஜெயக்குமார் (38), லோகன் (39) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கிணற்றில் தொழிலாளி சடலம்
ராணிப்பேட்டை, மே 11: ராணிப்பேட்டையை அடுத்த சீனிவாசன்பேட்டையைச் சேர்ந்த மோகனின் மகன் சதீஷ்குமார் (22), கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இவர் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அதே பகுதியில் உள்ள தரைமட்ட கிணற்றின் அருகே இவரது காலணி கிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் தேடியபோது, இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அரசு சொகுசு பஸ் கவிழ்ந்து 23 பேர் காயம்
ஆர்க்காடு அருகேயுள்ள வேப்பூர் பை பாஸ் சாலையில் தனியார் பால் பண்ணை அருகே சனிக்கிழமை அதிகாலை கர்நாடக அரசு சொகுசு பஸ் கவிழ்ந்ததில், 23 பயணிகள் காயம் அடைந்தனர்.
பெங்களுரிலிருந்து சென்னையை நோக்கி வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்ட இப்பஸ்ஸில் பெங்களுர் ஜே.பி.நகரைச் சேர்ந்த சுந்தர் (52) டிரைவராகவும், கங்காதரராவ் (54) நடத்துநராகவும் வந்தனர்.
ஆர்க்காடு அருகே வந்தபோது, பஸ் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாம். இதில், பெங்களுரைச் சேர்ந்த கண்ணம்மாள் (56), வின்னாஷ் (25), பிரேமா(50), விஜயகிருஷ்ணன் (58), போனிரூமால் (23), ஸ்ரீகாந்த் (31) உள்ளிட்ட 23 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
கரூர் மாவட்டம், புதுகுளத்துப்பாளையம் அருகேயுள்ள வெங்கமேடை சேர்ந்த சந்திரசேகரின் மகன் தொழிலாளி ரவி (42), விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவர் கடந்த 5ஆம் தேதி பைக்கில் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையை நோக்கி சென்றுள்ளார். அவரது பைக் ராணிப்பேட்டை அருகேயுள்ள பை பாஸ் சாலையில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாம்.
இதில், படுகாயம் அடைந்த அவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ரவியை அவரது உறவினர்கள் அழைத்துச் சென்று, கரூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!

அபிஷன் ஜீவிந்த்தின் புதிய பட புரோமோ!

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


