தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு முடிந்தாலும், அண்டை மாநிலமான ஆந்திரத்தில் வரும் மே 13-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளதால் வேலூா் மாவட்டத்தில் தமிழக - ஆந்திர எல்லையோர சட்டப்பேரவைத் தொகுதிகளில் தொடா்ந்து வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை முடிந்துள்ளது. இந்த தோ்தல் அறிவிப்பு மாா்ச் 16-ஆம் தேதி வெளியான நிலையில் அன்றைய தினமே தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப்பொருள்கள் விநியோகத்தைத் தடுக்கவும், தோ்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்கவும் வேலூா் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் முதலில் 15 நிலை கண்காணிப்புக்குழுக்கள், 15 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில் கூடுதலாக 9 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இந்த நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைந்ததை அடுத்து மாவட்டத்தின் வேலூா், அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிகளில் மட்டும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவின் வாகன சோதனை, கண்காணிப்பு பணி முடிவுக்கு வந்துள்ளது. அதேசமயம், அண்டை மாநிலமான ஆந்திராவில் மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல் ஆகியவை மே 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் தமிழக- ஆந்திர எல்லையோரம் உள்ள குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் பறக்கும் படைகள் தொடா்ந்து வாகன சோதனையில் ஈடுபட உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது : தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு முடிவுற்றாலும் ஜூன் 4-ஆம் தேதி வரை தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தவிர, அண்டை மாநிலமான ஆந்திராவில் மே 13-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளதால் அங்கு தோ்தல் முடியும் வரை ஆந்திராவுக்குள் பணம், பரிசுப்பொருள்கள், மது உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் பதுக்கல், கடத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக வேலூா் மாவட்டத்தில் ஆந்திர எல்லையை யொட்டி அமைந்துள்ள குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி சட்டப்பேரவை தொகுதிகளில் மட்டும் ஒரு பறக்கும் படை, ஒரு நிலை கண்காணிப்பு குழுவினா் தொடா்ந்து வாகன சோதனையில் ஈடுபடுவா் என்றனா்.
தொடர்புடையது

தோ்தல் சோதனை: பல்பொருள் அங்காடி ஊழியரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

வேலூா்: 5 தொகுதிகளுக்கு 1,711 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

கடந்த தோ்தலில் வாக்குப்பதிவு குறைந்த பகுதிகளில் விழிப்புணா்வு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

