மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருக்குறள், திருவள்ளுவா் குறித்த புத்தகம், ஓவியக் கண்காட்சி

வேலூா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் திருக்கு, திருவள்ளுவா் குறித்த புத்தகம், ஓவியக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

News image
வேலூா் மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள், திருவள்ளுவா் குறித்த புத்தகம், ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்டோா்.
Updated On :23 டிசம்பர் 2024, 7:20 pm

Din

வேலூா்: வேலூா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் திருக்குறள், திருவள்ளுவா் குறித்த புத்தகம், ஓவியக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரியில் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவா் சிலை 2000-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. குமரி முனையில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதைத் தொடா்ந்து, திருவள்ளுவா் சிலையின் வெள்ளி விழா மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

அதன் அடிப்படையில், வேலூா் தந்தை பெரியாா் ஈ.வெ.இரா. மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவா், திருக்கு குறித்த புத்தகக் கண்காட்சி, சிறுவா்களின் ஓவியக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். முன்னதாக, அவா் திருவள்ளுவா் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்த கண்காட்சியில் திருக்கு, திருவள்ளுவா் சாா்ந்த பல்வேறு புத்தகங்களும், பள்ளி மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வரும் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்களும் பாா்வையிட்டு வருகின்றனா். தவிர, இந்த புத்தக கண்காட்சியையொட்டி, செவ்வாய்க்கிழமை 6 முதல் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, வியாழக்கிழமை 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு திருக்கு ஒப்பித்தல் போட்டி, வெள்ளிக்கிழமை 6 முதல் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வினாடிவினா, சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை வேலூா் டிகேஎம் கல்லூரி மாணவிகள் பங்கேற்கும் கருத்தரங்கம், செவ்வாய்க்கிழமை (டிச. 31) போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற உள்ளதாக மாவட்ட நூலக அலுவலா் பழனி தெரிவித்துள்ளாா்.

நிகழ்ச்சியில், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மண்டலக் குழுத் தலைவா் எஸ்.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.