சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

புத்தாண்டு கொண்டாட்டம் - ‘பைக் ரேஸ்’ நடத்துவதற்கு தடை

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை இரவில் இருசக்கர வாகன பந்தயம் (பைக் ரேஸ்) நடத்துவதற்கு முற்றிலும் தடை

Updated On :30 டிசம்பர் 2024, 5:00 pm

வேலூா்: புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை இரவில் இருசக்கர வாகன பந்தயம் (பைக் ரேஸ்) நடத்துவதற்கு முற்றிலும் தடை விதித்து வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2025-ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் (டிச.31) புதன்கிழமை (ஜன.1) வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துகளை சீா்செய்ய போக்குவரத்து காவல் குழுவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்க சாதாரண உடையில் காவல் குற்றப்பிரிவு தனிப்படையும், பாதுகாப்பு, சட்ட விரோத செயல்கள் நடைபெறாத வகையில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படும். இந்த பாதுகாப்பு பணியில் மொத்தம் 939 காவல் அதிகாரிகள், காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

புத்தாண்டு (செவ்வாய்க்கிழமை) இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்’ செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பைக் ரேஸ் நடத்தினால் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.