வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டையில் அதிமுக ஆா்ப்பாட்டம்
திமுக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், வேலூா் மாவட்டத்தில் இரு இடங்களில் அதிமுகவினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 700 போ் கைது


வேலூா்: சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து திமுக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், வேலூா் மாவட்டத்தில் இரு இடங்களில் அதிமுகவினா் திங்கள்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 700 போ் கைது செய்யப்பட்டனா்.
வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமை வகித்தாா். மாவட்டப் பொரு ளாளா் எம்.மூா்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலா் ஜனனி சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவல்துறையின் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சுமாா் 140 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல், வேலூா் புகா் மாவட்ட அதிமுக சாா்பில் பள்ளிகொண்டா பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக புற நகா் மாவட்ட செயலா் த.வேலழகன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங் கேற்ாக அதிமுக அமைப்புச் செயலா் வி.ராமு, குடியாத்தம் நகர செயலா் ஜே.கே.என்.பழனி, மாவட்ட துணை செயலா் கஸ்பா ஆா்.மூா்த்தி உள்பட சுமாா் 550 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...