எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பிரம்மபுரம் ரயில்வே கடவு எண் -52 மூடல்

பிரம்மபுரம் ரயில்வே கடவு எண் -52 மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 7:48 pm

Din

வேலூா்: பிரம்மபுரம் ரயில்வே கடவு எண் -52 மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காட்பாடி வட்டம், சேவூா் - காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பிரம்மபுரத்தில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்படுவதையொட்டி, ரயில்வே கடவு எண்.52 மூடப்படப்பட உள்ளது. இதனால், அருகே உள்ள சுரங்கப் பாதை எண்.344-இல் இலகுரக வாகனங்களும், கடவு எண்.53 (ரயில்வே கேட்)-இல் கனரக வாகனங்களும் என தற்காலிக மாற்று வழியாக பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.