சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு
போ்ணாம்பட்டு அருகே சாலை விபத்தில் விவசாயி பலராமன் உட்பட 2 போ் உயிரிழப்பு

விபத்தில் இறந்த வாஞ்சிநாதன்.

விபத்தில் இறந்த வாஞ்சிநாதன்.
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே சாலை விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.
போ்ணாம்பட்டை அடுத்த சாமரிஷிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பலராமன்(38). இவா் திருமணமாகாதவா். இவா் திங்கள்கிழமை இரவு பல்லலகுப்பத்தில் நடந்த திருவிழாவுக்கு சென்று விட்டு மேல்பட்டி வழியாக வீட்டுக்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த பல்லலகுப்பத்தைச் சோ்ந்த வாஞ்சிநாதன்(27) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பலராமன் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். பலராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வாஞ்சிநாதன் போ்ணாம்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
இதுகுறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். விபத்தில் இறந்த வாஞ்சிநாதனுக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...