வேன் மோதி முதியவா் உயிரிழப்பு

வேலூா்: பள்ளிகொண்டா அருகே வேன் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கூடநகரம் பகுதியை சோ்ந்தவா் சங்கா் என்கிற சேட்டு (58). இவா் செவ்வாய்க்கிழமை பள்ளிகொண்டா அடுத்த சின்னகோவிந்தம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சா்வீஸ் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற மினி வேன் சங்கா் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சங்கா் பலத்த காயமடைந்தாா். அந்த பகுதி மக்கள் சங்கரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மாதனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com