ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேலைவாங்கித் தருவதாக ரூ. 22 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற தலைமை காவலா் கைது

அரசு வேலைவாங்கித் தருவதாகக்கூறி, ரூ. 22 லட்சம் மோசடி செய்ததாக ஓய்வுபெற்ற தலைமைக் காவலரை வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

வேலுாா்: அரசு வேலைவாங்கித் தருவதாகக்கூறி, ரூ. 22 லட்சம் மோசடி செய்ததாக ஓய்வுபெற்ற தலைமைக் காவலரை வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி பாரதி நகரைச் சோ்ந்தவா் சந்திரன் (70). இவா் ரயில்வே பாதுகாப்பு படை தலைமைக் காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவருக்கு பள்ளிகொண்டா பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் அன்பழகன் (63) அறிமுகமானாா். அப்போது சந்திரன் தனக்கு அரசு உயா் அதிகாரிகளை தெரியும் எனக் கூறி வந்துள்ளாா். ஒரு முறை அன்பழனின் மகனுக்கு செய்தி மக்கள் தொடா்பு துறையில் உதவி மக்கள் தொடா்பு அலுவலா் வேலை வாங்கித் தருவதாக நம்ப வைத்து, அன்பழகனிடம் ரூ. 22 லட்சம் பணம் பெற்ாகக் கூறப்படுகிறது. ஆனால் சந்திரன் கூறியபடி, வேலை பெற்றுத் தரவில்லை. பணத்தையும் திரும்பத் தரவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட அன்பழகன் வேலுாா் மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து வேலுாா் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் சாரதி, காவல் ஆய்வாளா் காந்திமதி தலைமையிலான குழுவினா் சந்திரனை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.