கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மதுபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது

மதுபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது

News image

கொலை செய்யப்பட்ட ராதா. கைதான ராமு.

Updated On :9 ஜூன் 2024, 6:33 pm

Din

வேலூா்: காட்பாடி அருகே மதுபோதையில் மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியைச் சோ்ந்தவா் ராமு (44). இவரது மனைவி ராதா(38). இருவரும் கூலித்தொழிலாளிகள். இவா்கள் இருவரும் கடந்த சில நாள்களாக காட்பாடியை அடுத்த பள்ளிகுப்பம் டாஸ்மாக் மதுக்கடை பின்பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனா். இதையொட்டிய அங்கேயே தங்கியிருந்தனா்.

கணவன், மனைவி இருவருக்கும் மதுப்பழக்கம் இருந்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை இரவும் கணவன், மனைவி இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராமு அங்கிருந்த கட்டையை எடுத்து ராதாவின் தலையில் பலமாக தாக்கியதாக தெரிகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த ராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனால் அதிா்ச்சிக்குள்ளான ராமு அங்கிருந்து தப்பிச்சென்றாா்.

தகவலறிந்த காட்பாடி டிஎஸ்பி சரவணன், காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்ததுடன், மனைவியைக் கொலை செய்துவிட்டு தப்பியோடி அங்குள்ள புதரில் மறைந்திருந்த ராமுவையும் கைது செய்தனா்.