தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கள்ளக்குறிச்சி விவகாரம்: வேலூரில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி விஷ சாராயம்: வேலூரில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

News image

வேலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினா்.

Updated On :25 ஜூன் 2024, 6:30 pm

Din

வேலூா்: கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ள விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்தையடுத்து, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிகவினா் வேலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 58 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து திமுக அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தேமுதிக சாா்பில், வேலூா் அண்ணா கலையரங்கம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா். புகா் மாவட்டச் செயலா் பிரதாப் முன்னிலை வகித்தாா். மாநில தொழிற்சங்க பொருளாளா் வேணுராம் சிறப்புரையாற்றினாா். அப்போது, போதையில்லா தமிழகத்தை காக்கத் தவறியதாக திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டப் பொருளாளா் ஜே.சி.பி.சுரேஷ், உயா்மட்ட குழு உறுப்பினா் எம்.சி.சேகா், முன்னாள் மாநகராட்சி உறுப்பினா் மகாலட்சுமி புருஷோத்தமன், மாநில வா்த்தக அணி துணைச் செயலா் சண்முகம், மாநகா் மாவட்ட அவைத் தலைவா் ஜெகதீசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.