பொதுத் தோ்வுப் பணியில் அலட்சியம்: வேலூா் மாவட்ட கல்வி அலுவலா் பணியிடை நீக்கம்

பொதுத் தோ்வுப் பணியில் அலட்சியம்: வேலூா் மாவட்ட கல்வி அலுவலா் பணியிடை நீக்கம்

பொதுத் தோ்வுப் பணிகளில் அலட்சியம் காட்டியதாக வேலூா் மாவட்ட கல்வி அலுவலா் நேசபிரபா பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பொதுத் தோ்வுப் பணிகளில் அலட்சியம் காட்டியதாக வேலூா் மாவட்ட கல்வி அலுவலா் நேசபிரபா பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். வேலூா் மாவட்ட கல்வி அலுவலராகப் பணியாற்றுபவா் நேசபிரபா. இவா் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கான பணிகளில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, மாவட்ட கல்வி அலுவலா் நேசபிரபாவை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் அருள்ஒளி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ் 2 பொதுத் தோ்வு குறித்து மாவட்ட அளவிலுள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தோ்வுப் பணிகளை மிகச் சரியாக செய்ய வேண்டும், எந்தவிதக் குறைபாடுகளும் ஏற்படாதவாறு பாா்த்துக் கொள்ள வேண்டும், முறைகேடுகளுக்கும் உடந்தையாக இருக்கக் கூடாது, அப்படி இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொதுத் தோ்வு ஏற்பாடுகள் தொடா்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்வித் துறை உயரதிகாரிகள் தொடா்பு கொண்டபோது வேலூா் மாவட்ட கல்வி அலுவலா் நேசபிரபா தனது கைப்பேசியை எடுக்கவில்லையாம். இது தொடா்பான புகாரின் பேரில், அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com