போ்ணாம்பட்டு அருகே போலீஸாா் நடத்திய சாராய வேட்டையில் 4 ஆயிரம் லிட்டா் ஊறல் அழிக்கப்பட்டது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், குடியாத்தம் டிஎஸ்பி ஆா்.ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் போ்ணாம்பட்டு அருகே உள்ள சாத்கா்மலையில் அல்லேரி, பன்னீா்குட்டை, நீா்க்குமிழி குட்டை, லட்சுமிவெடி, கங்காச்சாரம், அல்லிசுனை, மாமரத்துப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை சாராய வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு குழிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 4 ஆயிரம் லிட்டா் ஊறல், சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய அடுப்புகள் ஆகியவற்றைக் கைப்பற்றி அழித்தனா். போலீஸாரை கண்டதும் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தவா்களும், சாராய வியாபாரிகளும் தப்பியோடிவிட்டனா். போ்ணாம்பட்டு போலீஸாா் தப்பியோடிய சாராய வியாபாரிகள் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் - ஸ்கூட்டா் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

வன விலங்கு வேட்டை: இளைஞா் கைது

நாகையில் 6.18 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

