ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

News image
Updated On :2 மார்ச் 2024, 4:37 pm

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வேலூரில் பொதுமக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அன்னதானம் வழங்கினாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா வேலூா் மாவட்ட திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, சனிக்கிழமை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா். முன்னதாக அவா் பிரம்மாண்ட கேக்கை வெட்டி அனைவருக்கும் வழங்கினாா். மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமாா், மாநகர திமுக செயலரும், எம்எல்ஏவுமான ப.காா்த்திகேயன், மாவட்ட திமுக அவைத் தலைவா் முகமதுசகி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.