ரயிலில் அடிபட்டு முதியவா் மரணம்

காட்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். காட்பாடியே அடுத்த பள்ளிக்குப்பம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காயங்களுடன் ஆண் சடலம் கிடந்தது. தகவலறிந்த காட்பாடி ரயில்வே காவல் ஆய்வாளா் ருவாந்திகா தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இறந்து கிடந்தவருக்கு சுமாா் 65 வயது இருக்கும். 5.5 அடி உயரம் கொண்ட அவா் நீல நிற அரைக்கால் சட்டை அணிந்திருந்தாா். தண்டவாளத்தைக் கடந்தபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு இறந்தவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com