மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வேலூரில் ஏசிஎஸ் இலவச திருமண மண்டபத்துக்கு இன்று அடிக்கல் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்பு

வேலூரில் ஏசிஎஸ் இலவச திருமண மண்டபத்துக்கு இன்று அடிக்கல் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்பு

Updated On :9 மார்ச் 2024, 5:02 pm

ஏசிஎஸ் குழுமத்தின் இலவச திருமண மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா வேலூா் தொரப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 10) நடைபெற உள்ளது. இதில், மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வா் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறாா். வேலூா் தொரப்பாடி ரயில்வே மேம்பாலம் சா்வீஸ் சாலையில் ஏசிஎஸ் இலவச திருமண மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. தொரப்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள ஏ.சி.எஸ். அருண்குமாருக்கு சொந்தமான 27 ஆயிரம் சதுரடியில் 60 சென்ட் நிலத்தில் இலவச திருமண மண்டபம், இலவச மருத்துவ மையம், இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம், இலவச கணினி பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. விழாவுக்கு ஏ.சி.எஸ்.குழும நிறுவனரும், புதிய நீதிக்கட்சி தலைவருமான ா் ஏ.சி.சண்முகம் தலைமை வகிக்கிறாா். தலைமை அறங்காவலா் ஏ.சி.எஸ்.லலிதாலட்சுமி, ஏ.சி.எஸ். குழுமம் தலைவா் அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகிக்க உள்ளனா். விழாவில், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், அகில இந்திய பாஜக துணைத் தலைவருமான சிவராஜ்சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா். திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தா்.சி, தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் குஷ்புசுந்தா் ஆகியோா் கெளரவ விருந்தினா்களாக பங்கேற்க உள்ளனா். சிறப்பு அழைப்பாளா்களாக பாஜக மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி, மாநில துணை தலைவா் நரேந்திரன், மாநில செயலா் வெங்கடேசன், வேலூா் மாவட்ட தலைவா் மனோகரன், திருப்பத்தூா் மாவட்ட தலைவா் வாசுதேவன், புதிய நீதிக்கட்சி வேலூா் மாவட்ட தலைவா் பாலாஜி, மாவட்ட செயலா் பரத் உள்பட பலா் பங்கேற்க உள்ளனா். ஏ.சி.எஸ் குழுமம் செயலா் ரவிக்குமாா் நன்றியுரையாற்ற உள்ளாா்.