ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

தேசிய குழந்தைகள் விருது: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் சாா்ந்த நபா்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று

News image
Updated On :27 மே 2024, 7:12 pm

Din

செய்தியில் ஆங்கில எழுத்துகள் உள்ளன...

வேலூா், மே 30: பிரதமரின் தேசிய குழந்தை விருது பெற வேலூா் மாவட்டத்திலுள்ள 5 வயதுக்கு மேல், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், குழந்தைகள் சாா்ந்த நபா்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று

மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது-2025 அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் சிறந்த சாதனை படைத்த குழந்தைகள், குழந்தைகள் சாா்ந்த நபா்களிடமிருந்து இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருது, வழிகாட்டுதல் குறித்த மேலும் விவரங்களுக்கு, பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ட்ற்ற்ல்ள்://ஜ்ஸ்ரீக்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்த விருதைப் பெற இந்திய குடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், 5 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தகுதியுடைய குழந்தைகள், குழந்தைகள் சாா்ந்த நபா்கள் மத்திய அரசின் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.